ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவு


அபுதாபி, நவ 27 -
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, ஐக்கிய அரபு எமிரேட் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிபர் ஷேக் காலிபா கூறியதாவது:-
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவுப்படுத்தும் போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு யு.ஏ.இ. முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு ஷேக் காலிபா கூறினார்.