ஈராக்கில் நடைபெறவுள்ள குர்ஆன் கண்காட்சி

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: குர்ஆனிய ஆக்கங்கள் மற்றும் வெளியீடுகளின் கண்காட்சியொன்று, ஈராக்கின் தீகர் மாகாணத்திலுள்ள குர்ஆனிய நிலையங்களில், டிசம்பர் 7 – 19 வரை, நஸ்ரிய்யாஹ் நகரில் இடம்பெறவுள்ளது.
கண்காட்சி தொடர்பாக இக்னாவுடன் உரையாற்றிய நஸ்ரிய்யாவிலுள்ள தாருல் குர்ஆன் நிலையத்தின் தலைவர் ரஅத் அத்னான் குறிப்பிடுகையில், அப்பாஸ் அல்கவிப்ரவி மஸ்ஜிதில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சி, மாகாணத்திலுள்ள குர்ஆனிய நிலையங்கள் அனைத்திலிருந்தும் ஆக்கங்களை காட்சிப்படுத்தவுள்ளது.
இந்த குர்ஆனிய நிலையங்கள், தமது கற்கைகள் மற்றும் பாடநெறிகள் தொடர்பாக விளக்கும் புகைப்படங்களைக் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளை முன்வைக்கவுள்ளன. அத்துடன், குர்ஆனிய ஆக்கங்கள், சஞ்சிகைகள் மற்றும் ஏனைய வெளியீடுகள் பற்றியும் அவை காட்சிப்படுத்தவுள்ளன.
நஸ்ரிய்யாவின் தாருல் குர்ஆன் நிலையம், குர்ஆனிய மாத இதழ்கள் கல்வியியல் சஞ்சிகைகள் அடங்கிய குர்ஆனிய உற்பத்திகளைக் காட்சிப்படுத்தவுள்ளது.
இந்நிலையம், பல்வேறு வயதுக் குழுக்களுக்கான குர்ஆனிய மனனம் மற்றும் குர்ஆனிய எண்ணக்கரு தொடர்பான
கற்கைகளையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment